;
Athirady Tamil News

1.3 மில்லியன் பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்களுடன் ஒருவர் கைது..!!

0

சட்டவிரோதமான முறையில் தங்க பிஸ்கட்கள் இரண்டை எடுத்து வந்த பிரித்தானிய பிரஜா உரிமையை கொண்ட இலங்கையர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் பிரித்தானியவை சேர்ந்த 55 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இன்று அதிகாலை 5.20 மணியளவில் டுபாயில் இருந்து வந்த fly dubai விமான சேவைக்கு சொந்தமான FZ 547 விமானத்தில் குறிப்பிட்ட நபர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.

இந்நிலையில் பயணிகள் வருகை தரும் ஒழுங்கின் ஊடாக குறித்த நபர் வருகை தரும்போதே சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபருடைய பணப்பையில் மற்றும் பாதணியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 100 கிராம் எடை கொண்ட இரண்டு தங்க பிஸ்கட்டுக்கள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட தங்க பிஸ்கட்கள் 13 இலட்சம் ரூபா பெறுமதியுடையவை என சுங்க ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × five =

*