;
Athirady Tamil News

யாழில் மாணவிகளுடன் சேட்டை செய்த ஆசிரியர் – பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை..!!

0

வலி.வடக்கு பிர­தேச செய­லர் பிரி­வுக்­குட்­பட்ட பிர­பல பாட­சா­லை­யின் ஆசி­ரி­யர் ஒரு­வர், பாட­சாலை மாண­வி­க­ளுக்கு கடந்த 6 மாத கால­மாக தொந்­த­ரவு -– சேட்­டை­விட்டு வந்ததாக எழுப்பட்ட குற்றச்சாட்டைத் தொடர்ந்து தெல்­லிப்­ப­ழைப் பொலி­ஸா­ரால் நேற்­றுக் கைது செய்­யப்பட்டார்.

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் பொலிஸ் வட்­டா­ரங்­கள் தெரி­வித்­த­தா­வது,
கொழும்­பி­லுள்ள தேசிய சிறு­வர் பாது­காப்பு அதி­கார சபைக்கு பெற்­றோர் சிலர் முறைப்­பாடு செய்­துள்­ள­னர். அதற்கு அமை­வாக, எமக்கு முறைப்­பாடு கிடைக்­கப் பெற்­றது. இது தொடர்­பில் நாம் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தோம். பாதிக்­கப்­பட்ட மாண­வி­கள் 8 பேரி­டம் இது­வரை வாக்­கு­மூ­லம் பதிவு செய்­துள்­ளோம். சம்­பந்­தப்­பட்ட ஆசி­ரி­ய­ரைக் கைது செய்­துள்­ளோம் என்று குறிப்­பிட்­ட­னர்.

‘கடந்த 6 மாத கால­மாக எமது பிள்­ளை­க­ளு­டன் மேற்­படி ஆசி­ரி­யர் தவ­றான நோக்­கு­டன் சேட்­டை­விட்டு வந்­துள்­ளார். மேல­திக வகுப்பு என்று கூறி பிள்­ளை­களை அழைத்து அவர்­க­ளு­டன் தவ­றாக நடக்க முற்­பட்­டுள்­ளார். மாண­வி­களை தனி அறைக்கு அழைத்­துச் சென்று அவர்­களை தவ­றான வழி­யில் நடத்த முற்­பட்­டுள்­ளார். இந்த விட­யங்­களை வெளி­யில் யாரி­ட­மும் கூற­வேண்­டாம் என்று அச்­சு­றுத்­தி­யுள்­ளார். இத­னால் நீண்ட காலத்­தின் பின்­னரே பிள்­ளை­கள் எமக்­குத் தெரி­வித்­த­னர். நாம் அதி­ப­ரி­டம் தெரி­வித்­தோம். அவர்­கள் விட­யத்தை மூடி மறைக்க முற்­பட்­ட­மை­யி­னால், தேசிய சிறு­வர் பாது­காப்பு அதி­கார சபை­யி­டம் முறை­யிட்­டோம்’ என்று கூறி­னர்.

இந்த விவ­கா­ரம் தொடர்­பில் பாட­சா­லை­யின் அதி­ப­ருக்­கும், பெற்­றோ­ருக்­கும் இடை­யில் நேற்­றுக் கலந்­து­ரை­யா­டல் நடை­பெற்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 − 5 =

*