;
Athirady Tamil News

ராகுல்காந்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார் – பா.ஜனதா கண்டனம்..!!

0

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்புபடுத்தி குற்றம் சாட்டியதற்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இதுபற்றி பா.ஜனதா தலைவர் சாம்பிட் பட்ரா டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பதற்றமான மற்றும் துயரமான ஒரு சம்பவத்தை பயன்படுத்தி ராகுல்காந்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார். சட்டம், ஒழுங்கு பிரச்சினை மாநிலம் சம்பந்தப்பட்ட வி‌ஷயம் என்பது அவருக்கு(ராகுல்காந்தி) தெரியாதா?… இந்த உலகின் எந்த மூலையில் ஏதாவது ஒரு பிரச்சினை என்றாலும் அதை ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் இணைத்து குற்றம்சாட்டுவது அவருடைய வாடிக்கையாகிவிட்டது.

பிரதமர் ஆவதற்கு பகல் கனவு காணும் ஒருவரிடம் இருந்து ஓரளவு அறிவு முதிர்ச்சியையாவது எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 3 =

*