;
Athirady Tamil News

கொட்டும் மழையிலும் பல்கலைகழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில்..!! (படங்கள்)

0

திருகோணமலை – கண்டி வீதியை மறித்து பல்லைகழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று (24) காலை 10 மணியளவில் மேற்கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக மாணவர்களே இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

தமது அடிப்படைத் தேவைகள் குறித்து தொடர்ச்சியாக பல அதிகாரிகளிடம் முறையிட்ட போதும் தமக்கு உரிய தீர்வு இதுவரை கிடைக்காததை அடுத்தே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

கணேஷன் சந்தியில் ஆரம்பித்த மாணவர்களின் நடை பவனி, தலைமை பொலிஸ் சந்தி ஊடக அபயபுர சந்தியை அடைந்த நிலையில் பின்னர், கண்டி – திருகோணமலை வீதியை மறித்த வண்ணம் ஆர்ப்பாட்டமாக மாறியதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

சுமார் நான்கு மணித்தியாலயங்கள் நீடித்த இந்த ஆர்ப்பாட்டத்தால், அப்பகுதி ஊடான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் பொலிஸாரின் தலையீட்டை அடுத்து பல்கலைகழக நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தைக்கு ஒன்றுக்கு செல்ல மாணவர்கள் உடன்பட்ட நிலையில் கலைந்து சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 + 18 =

*