;
Athirady Tamil News

எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் – ராஜ்நாத் சிங்..!!

0

மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், உள்துறை செயலாளர் ராஜீவ் கௌபா, எல்லை நிர்வாக சிறப்பு செயலாளர் பி.ஆர். சர்மா, எல்லை நிர்வாக இணை செயலாளர்கள் மற்றும் மற்ற மூத்த அதிகாரிகளுடன் இன்று டெல்லியில் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, நாட்டின் எல்லைகளில் நிலையான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பை பராமரிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

அலோசனையின் போது, எல்லைகளில் பாதுகாப்பு வேலி அமைக்கும் பணிகள், எல்லையை ஒட்டி சாலைகள் மற்றும் கண்காணிப்பு சாவடிகள் அமைக்கும் பணிகள் எந்த அளவில் நடைபெற்று வருகிறது என்பது குறித்து அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் விவாதித்தார். அதில், இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் வேலி அமைக்கும் பணிகள் 97 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் கூறிய பதிலில் அவர் திருப்தி அடைந்தார்.

இந்திய கடலோரப் பகுதிகளின் பாதுகாப்பு முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமைந்துள்ள 194 கடலோர காவல் நிலையங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட ஏதுவாக படகுகள் மற்றும் பிற பாதுகாப்பு உபகரணங்களை விரைவில் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கூறினார்

இந்தியா-நேபாளம், இந்தியா- பூடான், இந்தியா- வங்காளதேசம் எல்லைகளில் 6 ஒருங்கிணைந்த சோதனை சாவடிகள் அமைக்கப்படும் பணி நிறைவடைந்ததற்கு பாராட்டு தெரிவித்த ராஜ்நாத் சிங், அப்பகுதி எல்லைகளில் மேலும் 13 ஒருங்கிணைந்த சோதனை சாவடிகள் அமைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × one =

*