;
Athirady Tamil News

ஒருதொகை கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது..!!

0

வவுனியா, இ.போ.ச பஸ் நிலையத்தில் ஒருதொகை கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா வலய குற்ற தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து துருகோணமலை நோக்கி பயணித்த பஸ் ஒன்றில் வைத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன்போது குறித்த பெண்ணிடமிருந்து 04 கிலோவும் 62 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர் யாழ்ப்பாணம், அரியாலை பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடையவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பெண் இன்று வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five − 2 =

*