சிஎஸ்கே விளையாடும் ஐபிஎல் பைனல்சில் மேட்ச் பிக்சிங்கா…. பரபரப்பை கிளப்பும் வீடியோ..!!

ஐபிஎல் பைனல்ஸ் போட்டியில் மேட்ச் பிக்சிங் செய்யப்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தை ஏற்படும் வீடியோ தற்போது உலா வந்து கொண்டிருக்கிறது. ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏற்கனவே பைனல்ஸ் முன்னேறியுள்ளது.
நாளை நடக்கும் 2-வது தகுதிச் சுற்று ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோத உள்ளன. இதில் வெற்றி பெறும் அணி, வரும் 27ம் தேதி மும்பையில் நடக்கும் பைனல்சில் சிஎஸ்கேவுடன் மோதும்.
இந்த நிலையில், சமூகதளங்களில் ஒரு வீடியோ வெளிவந்துள்ளது. போட்டியை ஒளிபரப்பு செய்யும் உரிமையை பெற்றுள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் ஹாட்ஸ்டார் தளத்தில் பைனல்ஸ் குறித்து விளம்பரம் வருகிறது.
சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா வீரர்கள் இருப்பது போன்று அந்த விளம்பரம் உள்ளது. அதனால் பைனல்ஸ் குறித்து மேட்ச் பிக்சிங் செய்யப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சமூகதளங்களில் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், அந்த விளம்பரத்தை ஹாட்ஸ்டார் நீக்கியுள்ளது.
Hotstar Predicted IPL Final So Early CSKvKKR Lmao 😂
Fixed? pic.twitter.com/TxwgW596A3— Sharan (@hanjiokay) May 23, 2018