;
Athirady Tamil News

வவுனியாவில் ஆக்கிரமிக்கப்பட்ட விளையாட்டுத்திடல்கள் நகரசபையினால் பெறுப்பேற்பு..!!

0

PICT0038
அக்கினிச்சிறகுகள் அமைப்பினரால் வவுனியா நகரசபையினருக்கு முன்வைக்கப்பட்ட வைரவப்புளிங்குளம் சிறுவர் விளையாட்டுத்திடலை தனியார் ஆக்கிரமிப்பிலிருந்து பொறுப்பேற்கவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்திருந்தோம். இதையடுத்து நேற்றைய தினம் இடம்பெற்ற நகரசபைக்கூட்டத்தில் தனியாரினால் அபகரிக்கப்பட்டுள்ள விளையாட்டுத்திடல்களை நகரசபையினரால் பொறுப்பேற்கப்படவேண்டும் என்ற முடிவுகள் நகரசபை தலைவர், உறுப்பினர்களினால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அக்கினிச்சிறகுகள் அமைப்பின் தலைவர் செ. அரவிந்தன் அனுப்பியுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவது, நகரசபை ஆளுகைக்குட்பட்ட நகரசபையின் பொறுப்பில் தனியாரினால் அபகரிக்கப்பட்டுள்ள விளையாட்டுத்திடல்களை நகரசபையினால் நேற்று முதல் பொறுப்பேற்கப்பட்டுள்ளது. குறிப்பாக வேப்பங்குளம், வைரவப்பளியங்குளம் பகுதிகளிலுள்ள விளையாட்டுத்திடல்கள் உட்பட சில விளையாட்டுத்திடல்கள் நகரசபையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.

இவ் விளையாட்டுத்திடல்களுக்கான பெயர்ப்பலகைகள் நாட்டப்பட உள்ளதோடு இன்று முதல் நகரசபையில் விளையாட்டுத்திடலுக்குரிய வாடகைப்பணத்தினைச் செலுத்த முடியும். தமது அமைப்பினரால் விடுக்கப்பட்ட கோரிக்கையினை ஏற்று நகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதற்காக நகரசபைத் தலைவர் நகரசபை உறுப்பினர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − 6 =

*