;
Athirady Tamil News

வவுனியாவில் பொது மயானக்காணி அபகரிப்பு..!! (படங்கள்)

0

வவுனியா சாந்தசோலை கிராமத்தின் பொது மயானத்திற்கென ஒதுக்கப்பட்ட ஒரு பகுதி இனந்தெரியாத நபர் ஒருவரினால் அபகரிக்கப்பட்டுள்ளதுடன் தூண்போட்டு வேலி அடைக்கப்பட்டுள்ளதாக இன்று பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

இவ் விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், சாந்த சோலை கிராமத்திற்கான பொது மயானத்தின் காணி கொக்குவெளியிலுள்ள பெரும்பான்மை இனத்தவரினால் அபகரிக்கப்பட்டுள்ளதுடன் தமிழ் இனத்தவர் ஒருவருக்கு முற்பணம் பெறப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதென தெரியவந்துள்ளது.

இன்று பொது மயானத்திற்கு இறுதிக்கிரியைகளுக்காகச் சென்ற பொதுமக்கள் பொது மயானக்காணியில் தூண்போட்டு வடக்குப்பகுதியில் இரண்டரை ஏக்கர் பரப்பளவு அபகரிக்கப்பட்டுள்ளதை அவதானித்துள்ளதுடன் அது பொது மயானத்திற்குரியது என்பதையும் கிராம அபிவிருத்திச்சங்கத்தினூடாக அறிந்து கொண்டபின்னர் இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.

பொது மயானத்திற்குச் சென்ற பொலிசார் கிராம அபிவிருத்திச்சங்கத்திடம் கிராம சேவையாளர், பிரதேச செயலாளர், மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கு முறையிடுமாறு ஆலோசனை வழங்கியுள்ளனர். இதையடுத்து கிராம சேவையாளருக்கு முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிராம சேவையாளரின் துரித நடவடிக்கையினால் குறித்த காணி கொக்குவெளியிலுள்ள பெரும்பான்மை இனத்தைச்சார்ந்தவர் ஒருவர் அக்காணியினை அபகரித்துள்ளதுடன் காணியினை தமிழர் ஒருவருக்கு முற்பணம் பெறப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து சாந்தசோலை கிராம அபிவிருத்திச்சங்கம் தொடர்புபட்ட அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen + eighteen =

*