காங்கோ நாட்டில் படகு கவிழ்ந்த விபத்தில் 49 பேர் பலி..!!

காங்கோ நாட்டின் டிசாபா மாகாணம் மான்கோட்டோ கிராமத்தில் இருந்து கடந்த புதன் கிழமை அன்று பண்டக்கா என்ற பகுதிக்குச் செல்ல காங்கோ நதியில் படகு மூலம் பலர் பயணம் செய்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ளதாகவும், விபத்து ஏற்பட்டதற்கான காரணம் முழுமையாக கிடைக்கவில்லை எனவும் டிசாபா மாகாண கவர்னர் போயோ லூகா தெரிவித்துள்ளார்.