;
Athirady Tamil News

மரண அச்சுறுத்தல் விடுக்கும் சந்தேகநபர் ஒருவர் கைது..!

0


மரண அச்சுறுத்தல் விடுத்தல் மற்றும் பணக் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் பேலியகொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் பேலியகொட பிரதேசத்தில் ஒருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து 10 இலட்சம் ரூபா பணத்தை பலாத்காரமாக பெற்றுக் கொள்ள முயற்சித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது சம்பந்தமாக பேலியகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் செய்த விசாரணையில் சந்தேகநபர் பேதியாகொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் பேலியகொட பேதியாகொட பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் என்பதுடன், அவர் இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − eight =

*