;
Athirady Tamil News

பெண்களிடம் பாலியல் அத்துமீறல் – ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வே வெயின்ஸ்டீன் ஜாமினில் விடுதலை..!!

0

ஹாலிவுட் பிரபலங்களான ஏஞ்சலினா ஜோலி, லூசியா இவான்ஸ் உள்ளிட்ட சுமார் 70 பெண்களிடம் பாலியல் ரீதியாக ஹார்வே தவறாக நடந்து கொண்டார் என அவர் மீது வெளிப்படையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

#MeToo movement என்ற ஹேஷ்டேக் உடன் மேலும் பல பெண்கள் தாங்களும் இவரது வலையில் வீழ்ந்த தகவல்களை பரிமாறி வருகின்றனர்.

ஆனால், தன்மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்துவரும் ஹார்வே, எதிர்பாலினத்தவர்களின் சம்மதத்துடன் அவர்களுடன் உறவு வைத்துகொண்டதாகவும், நான் யாரையும் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நியூயார்க் நகரில் உள்ள மன் ஹாட்டன் போலீசார் முன் ஹார்வே வெயின்ஸ்டீன் நேற்று சரணடைந்தார். அவரை கைது செய்த போலீசார், விலங்கு மாட்டி அழைத்து சென்று மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அவரை 10 லட்சம் டாலர் சொந்த ஜாமினில் நீதிமன்றம் விடுதலை செய்தது. தனது பாஸ்போர்ட்டை போலீசாரிடம் ஒப்படைக்கவும், செல்லும் இடத்தை கண்காணிக்கும் எலக்ட்ரானிக் பட்டை அணிந்து கொள்ளவும் ஹார்வே வெயின்ஸ்டீன் சம்மதித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten − seven =

*