;
Athirady Tamil News

வவுனியாவில் ரயிலிலுடன் மோதி டிப்பர் விபத்து..!! (படங்கள்)

0

வவுனியா ஒமந்தையில் இன்று (26.05.2018) மாலை 6.10மணியளவில் ரயிலிலுடன் மோதி டிப்பர் வாகனம் விபத்துக்குள்ளானது.

ஒமந்தை அரசமுறிப்பு பகுதியில் மண் மற்றும் கல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் ரயில்வே தண்டவாளத்தில் புதையுண்டது. இதன் போது கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதம் குறித்த டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் புகையிரதம் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் டிப்பர் வாகனத்திற்கு எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை

சம்பவ இடத்திற்கு விரைந்த ஒமந்தை போக்குவரத்து பொலிஸார் துரிதமாக செயற்பட்டு டிப்பர் வாகனத்தினை அவ்விடத்திலிருந்து அகற்றினார்கள்.

இவ் விபத்துச்சம்பவம் காரணமாக சுமார் 30நிமிடங்களின் பின்னரே புகையிரதம் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்தது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 3 =

*