;
Athirady Tamil News

ஓய்வுக்கு பின் விஞ்ஞானியான சுவிஸ் முதியவர்..!!

0

ஓய்வு பெற்றவர்கள் எப்படி மீதியுள்ள காலத்தை கடத்துவது என்ற சிந்தனையிலேயே மீதி நாட்களில் பாதியைக் கடத்துவார்கள், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பொறியாளர் ஒருவரோ தனது ஓய்வு காலத்தில் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு வருகிறார்.

சுவிட்சர்லாந்தின் ஓய்வு பெற்ற பொறியாளர் Gabriel Strebel. சாஸேஜ் என்றால் இவருக்கு கொள்ளைப் பிரியம். பணியிலிருக்கும்போது உலகம் முழுவதும் ஏராளமான இயந்திரங்களை விற்பனை செய்தGabriel, ஓய்வு பெற்றபின் தனது 300,000 ஃப்ராங்குகளையும் மூன்று வருடங்களையும் செலவிட்டு கிரில் ஒன்றைத் தயாரித்திருக்கிறார்.

வழக்கமான கிரில்கள் கிடைமட்டமாக இருக்கும், வேக வைக்கும் பொருள் எதையும் மாற்றி மாற்றிப் போட வேண்டும்

ஆனால் இவர் உருவாக்கியுள்ள கிரில் செங்குத்தானது, அதில் வேகவைக்கும் எந்த பொருளையும் மாற்றி மாற்றி போட வேண்டியதில்லை. அது மட்டுமின்றி ஒரு மணி நேரத்தில் நூற்றுக்கணக்கான சாஸேஜ்களையும் சமைக்க முடியும்.

நான் ரொம்ப சோம்பேறி, கிரில்லில் சிக்கனை மாற்றி மாற்றி போட்டுவிட்டு அது நிறம் மாறும்வரை காத்திருப்பது எனது பொறுமையை இழக்கச் செய்யும்.

அதிலிருந்துதான் இந்த சக்கர வடிவிலான கிரில்லை உருவாக்கும் திட்டம் எனக்கு உருவானது என்கிறார் Gabriel.

இன்னொரு விடயம், இந்த கிரில் சாஸேஜ்கள் மட்டுமின்றி சிக்கன் இறக்கைகளிலிருந்து வாழைப்பழம் வரை எதையும் வேகவைக்கக்கூடியது.

Gabrielஇன் உழைப்பும் முயற்சியும் வீண் போகவில்லை, இதுவரை ஜேர்மனியிலும் சுவிட்சர்லாந்திலும் சுமார் 120 கிரில்களை விற்றிருக்கிறார் அவர். அதுமட்டுமின்றி தனது கிரில்லின் அடுத்த வெர்ஷன்களையும் அவர் உருவாக்கி வருகிறார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen + 17 =

*