;
Athirady Tamil News

பியகம – கடுவலை பாலம் வழமைக்கு திரும்பியது..!!

0

பியகம மற்றும் கடுவலை ஆகிய நகரங்களை இணைக்கும் பிரதான பாலம் வழமையான நிலைக்கு திரும்பியுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சு கூறியுள்ளது.

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் அந்தப் பாலத்தால் பயணிப்பது அபாய நிலையை எதிர்கொண்டிருந்ததால் வாகனப் போக்குவரத்துக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிமின் ஆலோசனைப்படி வீதிப் அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் முப்படையினர் இணைந்து விரைவாக அந்தப் பாலத்தை திருத்தியமைத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × five =

*