மத்திய அரசு நான்கு ஆண்டு நிறைவு – பிரதமர் மோடிக்கு குமாரசாமி வாழ்த்து..!!

பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி 4 ஆண்டுகளை நிறைவு செய்ததை, அக்கட்சியினர் கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில், கர்நாடகம் மாநில முதல் மந்திரி குமாரசாமி மத்திய அரசு நான்கு ஆண்டு நிறைவு செய்துள்ளதற்கு பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நான்கு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதற்காக பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர்கள் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளனர். ஆனால் அவர்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை.
பிரதமர் மோடியை சந்திக்க விரைவில் டெல்லி செல்கிறேன். அவரை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். நாளை அல்லது நாளை மறுதினம் பிரதமரை சந்திக்க உள்ளேன். மேலும், பல்வேறு மந்திரிகளையும் பார்க்க உள்ளேன் என தெரிவித்தார்.
டெல்லியில் பிரதமர் மோடியை கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி நாளை (திங்கட்கிழமை) சந்தித்துப் பேச உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.