சுவிஸில் ரத்தவெள்ளத்தில் கிடந்த பெண்ணின் சடலம்: பொலிசார் துரித நடவடிக்கை..!!

சுவிட்சர்லாந்தின் Ostermundigen பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து பெண்ணின் சடலம் ஒன்றை பொலிசார் மீட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சலாந்தின் பெர்ன் மாகாணத்தில் உள்ள Ostermundigen பகுதியில் குடியிருப்பு ஒன்றில் இருந்து கெட்ட வாசம் வீசுவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார், பூட்டப்பட்டிருந்த குடியிருப்பின் உள்ளே புகுந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் கிடந்த பெண்ணின் உடலை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.
குடும்ப தகராறு காரணமாக கொல்லப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்துள்ள விசாரணையில் குறித்த பெண்மணி ஸ்லோவேனியா நாட்டவர் எனவும், இந்த விவகாரம் தொடர்பில் அந்த நாட்டு காவல்துறையுடன் தகவல் பரிமாற்றம் நடத்தப்படும் எனவும் பெர்ன் நகர பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஸ்லோவேனியா பொலிசார் குறித்த கொலை தொடர்பில் 38 வயதுடைய நபரை கைது செய்துள்ளதாகவும், அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியானது.
கொலை தொடர்பில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இரும்பு கம்பியால் தலையில் அடித்தே கொலை செய்துள்ளதாகவும் அவர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
தற்போது குறித்த பெண்மணியின் கொலை தொடர்பில் விரிவான விசாரணையை பெர்ன் பல்கலைக்கழகம் மேற்கொள்ள உள்ளது