;
Athirady Tamil News

இளைஞர்களை சுண்டி இழுத்துள்ள நடிகை சமந்தாவின் ஒர்க் அவுட் வீடியோ..!!

0


தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் அதிகளவில் பேசப்பட்டு வருவது நடிகை சமந்தாவின் ஒர்க் அவுட் வீடியோ தான்.

தமிழ், மற்றும் தெலுங்கு சினிமாவில் புகழின் உச்சத்தில் இருப்பவர் நடிகை சமந்தா. இவர் கடந்த வாரம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இரும்புத் திரைப்படத்தில் மருத்துவராக நடித்திருந்தார்.

திரையுலகில் அடியெடுத்து வைத்து பல ஆண்டுகளைக் கடந்த போதும் இளமையான தோற்றத்தில் காணப்படுகிறார் சமந்தா. தனது பிஸியான ஷெட்யூலிலும் உடற்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவர், உடற்பயிற்சி மேற்கொண்ட வீடியோவை தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவேற்றி உள்ளார்.

அந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. கலோரியை குறைப்பதற்காகவே; தான் உடற்பயிற்சி மேற்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை அவர் வெளியிட்டு இருப்பது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே இது தொடர்பாக சில வீடியோக்களை அவர் வெளியிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 − five =

*