;
Athirady Tamil News

உலகக் கோப்பை கால்பந்து… எந்தெந்த அணிகள் யாருடன் மோதப் போகின்றன..!!

0

ரஷ்யாவில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து தொடர் அடுத்த மாதம் 14ம் தேதி துவங்க உள்ளது. இதில் பங்கேற்கும் 32 அணிகள் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் ஜூன் 14ல் துவங்கி ஜூலை 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதில் போட்டியை நடத்தும் ரஷ்யாவைத் தவிர மற்ற 31 அணிகள் பல்வேறு தகுதிச் சுற்று ஆட்டங்கள் மூலம் தகுதி பெற்றுள்ளன. மொத்தம் 62 போட்டிகள் நடக்க உள்ளன. இந்த அணிகள் தலா 4 அணிகள் கொண்ட 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், அந்தப் பிரிவில் உள்ள மற்ற அனைத்து அணிகளுடன் விளையாடும்.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் என, 16 அணிகள் அடுத்தக்கட்ட நாக் அவுட் சுற்றில் விளையாடும். அதில் வெற்றி பெறும் 8 அணிகள் கால் இறுதிக்கு முன்னேறும். லீக் சுற்று ஆட்டங்கள் ஜூன் 14-ம் தேதி முதல் ஜூன் 28 வரையில் நடக்கிறது.

நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் ஜூன் 30ல் துவங்குகிறது.

கால் இறுதி ஆட்டங்கள் ஜூலை 6, 7-ம் தேதிகளிலும்

அரை இறுதி ஆட்டங்கள் 10 மற்றும் 11-ம் தேதிகளிலும் நடைபெறுகின்றன. பைனல்ஸ் ஜூலை 15ம் தேதி நடைபெறுகிறது.

பிரிவுகள் ஏ பிரிவு – ரஷ்யா, சவுதி அரேபியா, எகிப்து, உருகுவே.
பி பிரிவு – போர்ச்சுகல், ஸ்பெயின், மொராக்கோ, ஈரான்.
சி பிரிவு – பிரான்ஸ், ஆஸ்திரேலியா, பெரு, டென்மார்க்.
டி பிரிவு – அர்ஜென்டீனா, ஐஸ்லாந்து, குரேஷியா, நைஜீரியா.
இ பிரிவு – பிரேசில், சுவிட்சர்லாந்து, கோஸ்டாரிகா, செர்பியா.
எப் பிரிவு – ஜெர்மனி, மெக்சிகோ, ஸ்வீடன், தென்கொரியா.
ஜி பிரிவு – பெல்ஜியம், பனாமா, துனீஷியா, இங்கிலாந்து.
எச் பிரிவு – போலந்து, செனகல், கொலம்பியா, ஜப்பான்.

Read more at: https://tamil.mykhel.com/football/which-team-which-group-the-fifa-world-cup-010384.html?utm_source=www.mykhel.com&utm_medium=ad-blocker-728-1&utm_campaign=mykhel

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 5 =

*