;
Athirady Tamil News

தி.மு.க பிரமுகருக்கு கேக் ஊட்டிய பெண் இன்ஸ்பெக்டர்! அதிர்ந்த போலீஸ் ஸ்டேஷன்..!!

0

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றிய தி.மு.க மாணவர் அணி அமைப்பாளராக இருப்பவர் சிவச்சந்திரன். இவர் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து தி.மு.க சார்பில் நேற்று முன்தினம் வடுவூரில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டார். அதைத்தொடர்ந்து வடுவூர் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி தலைமையிலான போலீஸார் மறியலில் ஈடுபட்ட தி.மு.க-வினரை கைது செய்து வடுவூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், அன்றைய தினம் சிவச்சந்திரன், தனக்கு பிறந்தநாள் என்பதை காவல்நிலையத்தில் தெரிவித்தார். அதை அறிந்த தி.மு.க-வினர் சிவச்சந்திரனுக்கு பிறந்தநாள் கேக் ஒன்றை வாங்கி வந்து காவல் நிலையத்திலேயே வைத்து கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினர். இந்தக் கொண்டாட்டத்தில் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் பணியில் இருந்த போலீஸார் கலந்துகொண்டனர். தி.மு.க-வினர் சிவச்சந்திரனுக்கு கேக் வெட்டி ஊட்டியதைப்போல பணியிலிருந்து இன்ஸ்பெக்டரும் சிவச்சந்திரனுக்கு கேக் ஊட்டியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × one =

*