;
Athirady Tamil News

வேலூர் அருகே வீடு புகுந்து பெண்ணை தாக்கி கற்பழிக்க முயற்சி: வாலிபர் அட்டூழியம்..!!

0

வேலூர் அருகே கணியம்பாடி கம்மவான்பேட்டையில் உள்ள மோத்தக்கல் வடக்கு கொட்டா மேடு பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவர் மனைவி புஷ்பா (வயது 40). நேற்றிரவு வீட்டில் புஷ்பா தனியாக தூங்கி கொண்டு இருந்தார். இதையறிந்த அதே பகுதியை சேர்ந்த சதீஷ் (25) என்ற வாலிபர், இன்று அதிகாலையில் வீட்டிற்குள் அத்துமீறி புகுந்தார்.

தூங்கி கொண்டிருந்த புஷ்பா மீது சதீஷ் பாய்ந்து கற்பழிக்க முயற்சி செய்தார். திடுக்கிட்டு எழுந்த புஷ்பா கத்தி கூச்சலிட்டார். அவரை ஆசைக்கு இணங்குமாறு சதீஷ் மிரட்டினார். அதற்கு ஒத்துக்கொள்ளாத புஷ்பா கத்தி கூச்சலிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் புஷ்பாவை கடுமையாக தாக்கி, சுவற்றில் தலையை முட்டினார். இதில் புஷ்பா படுகாயமடைந்தார். இதையடுத்து, சதீஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, புஷ்பா காயமடைந்து கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம் பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுகுறித்து, வேலூர் தாலுகா போலீசில் புஷ்பா தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய சதீஷை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 + 13 =

*