;
Athirady Tamil News

அனர்த்தம் மற்றும் வன்முறையில் உயிரிழந்தவர்களுக்கு வவுனியாவில் அஞ்சலி..!! (படங்கள்)

0

தூத்துக்குடியில் உயிரிழந்தவர்கள் மற்றும் இலங்கை தென்பகுதியில் அனர்த்தம் காரணமாக உயிழந்தவர்களிற்கும் வவுனியாவில் இன்று (27) அஞ்சலி செலுத்தப்பட்டது.

குறித்த நிகழ்வு மதியம் 12 மணியளவில் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் ஒன்றியத்தினரால் ஏற்பாடு செய்யபட்டு கற்பகபுரம் முத்துமாரியம்மன் ஆலயத்தில் தீபம் ஏற்றி அஞ்சலி நிகழ்வு மேற்கோள்ளபட்டது.

நிகழ்வில் கருத்து தெரிவித்த அவர்கள் தமிழ்நாட்டில் நடந்த வன்முறை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதுடன் இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் தவிர்கபடவேண்டும் என்றும் கூறினர். அத்துடன் சீரற்ற காலநிலை காரணமாக தென்பகுதியில் உயிரிழந்த மக்களிற்கும் எமது அனுதாபங்களை தெரிவுப்பதாக கூறினர்.

நிகழ்வில் முண்ணாள் மாகாண சபை உறுப்பினரும் கோட்ட கல்வி அதிகாரியுமான எம்.பி.நடராஜ்,வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் ஒன்றியத்தின் முக்கியஸ்தர் குணறட்னம்,பிரதேச சபை உறுப்பினர்களான ஆர்.விஸ்வநாதன்,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 + 11 =

*