;
Athirady Tamil News

மருமகன் என்னை கொல்ல பார்க்கிறான்: கதறிய மாமியார்…. நடந்தது என்ன?..!!

0

அமெரிக்காவில் மாமியார் ஒருவர் தனது மருமகன் மீது கொலை முயற்சி புகார் அளித்த நிலையில் மருமகனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பாடீ கோப்மென் என்ற பெண் சில தினங்களுக்கு முன்னர் பொலிசில் புகார் மனு ஒன்றை அளித்தார்.அதில், என் மருமகன் டேனி மிக்குயிர்ட் (33) என் மகளை தினமும் அடித்து கொடுமைப்படுத்துகிறார்.

எங்களின் கார்களின் கண்ணாடியை உடைத்ததோடு, டயர்களை கிழித்துள்ளார்.

எல்லாவற்றுக்கும் மேலாக என்னையும், என் மகளையும் கொலை செய்துவிடுவேன் என மிரட்டி வருவதால் எனக்கு பயமாக உள்ளது என கூறியுள்ளார்.

பாடீயின் புகாரையடுத்து பொலிசார் டேனி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

டேனியிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் அவர் போதை மருந்துக்கு அடிமையானவர் என்பதும், அதை கடத்தும் விடயங்களை செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து பொலிசார் டேனியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen − 10 =

*