;
Athirady Tamil News

இப்படியும் ஒரு மோசமான தந்தையா? 2 வயது குழந்தையை சிகரெட் பிடிக்க வைத்த கொடூரம்..!! (வீடியோ)

0

சவுதி அரேபியாவில் இரண்டு வயது குழந்தையை அவரது தந்தையே சிகரெட் பிடிக்க வைக்கும் சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.சவுதி அரேபியாவில் 2 வயது குழந்தையை சிகரெட் பிடிக்க வைத்த தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கையில், இரண்டு வயது குழந்தையை அடையாளம் தெரியாத நபர் சிகரெட் பிடிக்க வைக்கிறார்.

அதன் பின் மீண்டும் மீண்டும் குழந்தையை சிகரெட் பிடிக்க வைக்கிறார். இது தொடர்பான வீடியோ சவுதி அரேபியாவில் வேகமாக பரவியதால் பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் இந்த வீடியோ வேகமாக பரவ பலரும் இதற்கு காரணமான நபரை திட்டி தீர்த்தனர்.

இந்நிலையில் பொலிசார் மேற்கொண்டு வந்த தொடர் விசாரணையில், குழந்தையை சிகரெட் பிடிக்க வைத்தது தந்தை தான் என்பது தெரியவந்துள்ளது.இதனால் சவுதி அரேபியா பொலிசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × three =

*