;
Athirady Tamil News

பாதிப்புக்குள்ளான பாடசாலைகள், மாணவர்கள் தொடர்பில் அறிக்கையிட விசேட குழு..!!

0

சீரற்ற காலநிலையினால் பாடசாலை மற்றும் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை அறிக்கையிடுவதற்காக, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் ஆலோசனைக்கு அமைய விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு மாகாண மற்றும் வலய மட்டத்திலும், பிரதேச செயலக மட்டத்திலும், பாடசாலைகளுக்கும் மாணவர்களுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்த விபரங்களை கல்வி அமைச்சுக்கு வழங்கும் என்று கல்வி அமைச்சின் இராஜாங்க செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதாரண தெரிவித்துள்ளார்.

இந்தக் குழுவின் அறிக்கை கிடைத்தவுடன், மாணவர்களுக்கு சீருடை, பாடப்புத்தகங்கள், பாதணிகள் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன.

இதேபோன்று பாதிக்கப்பட்ட பாடசாலைகளை உடனடியாக புனரமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கல்வி அமைச்சின் இராஜாங்க செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதாரண தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 + twelve =

*