;
Athirady Tamil News

ஜாஎல : விபத்தில் ஒருவர் பலி மேலும் ஒருவர் வைத்தியசாலையில்..!!

0

ஜாஎல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

ஜாஎல பகுதியில் இருந்து ஏக்கல நோக்கி பயணித்த மோட்டார் வாகனம் ஒன்று, மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் படுகாயமடைந்த இருவரும் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், படுகாயமடைந்த பெண் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ஏக்கல பகுதியை சேர்ந்த 37 வயதுடைய பெண் ஒருவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்து தொடர்பில் மோட்டார் வாகன ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஜாஎல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 − 3 =

*