;
Athirady Tamil News

35 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்களுடன் இந்தியர்கள் கைது..!!

0

டுபாய் நாட்டில் இருந்து சட்டவிரோதமான முறையில் தங்க பிஸ்கட்களை எடுத்து வந்த இந்தியர்கள் இருவரை இன்று (28) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இன்று அதிகாலை 5.20 மணியளவில் டுபாயில் இருந்து வந்த fly dubai விமான சேவைக்கு சொந்தமான FZ 551 விமானத்தில் குறிப்பிட்ட நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளனர்.

சந்தேகநபர்களிடம் ஹெரோயின் இருப்பதாக சந்தேகித்து சோதனை செய்யும் போதே அவர்களுடைய பணப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 தங்க பிஸ்கட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த நபர்களிடம் இருந்து 232 கிராம் எடை கொண்ட 35 இலட்சம் ரூபா பெறுமதியுடைய தங்க பிஸ்கட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இந்தியர்கள் இருவரும் டுபாய் நாட்டில் 3 நாட்கள் தங்கி பின்னர் இலங்கைக்கு வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 − seven =

*