;
Athirady Tamil News

வவுனியா வடக்கிற்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு..!! (படங்கள்)

0

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட 42 குடும்பங்களுக்கு வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கத்தால் வாழ்வாதாரஉதவிகள் (27) வழங்கி வைக்கப்பட்டன.

வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கான 2018ம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டில் மேற்படி வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன. நெடுங்கேணி கால் நடை வைத்தியர் பணிமனையில் நடைபெற்ற இந்தநிகழ்வில் 39 குடும்பங்களுக்கு நல்லின கோழிக் குஞ்சுகளும், 03 குடும்பங்களுக்கு ஆடு வளர்ப்பிற்கான காசோலைகளும் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் ச.தணிகாசலம் மற்றும் வடக்கு பிரதேச சபையின் உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven + twelve =

*