;
Athirady Tamil News

சுன்னாகம் சூசையப்பர் ஆலய தந்தையர் கழக விழா..!! (படங்கள்)

0

சுன்னாகம் சூசையப்பர் ஆலய தந்தையர் கழக விழா – வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டார்

சுன்னாகம் புனித சூசையப்பர் ஆலய தந்தையர்கழகத்தின் 33ஆவது ஆண்டு விழா நேற்று 27.05.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியளவில் ஆலயப்பங்குத்தந்தை தலைமையில் ஆலய வளாகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்ச்ச்சியின் பிரதம விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டதுடன், சிறப்பு விருந்தினராக வலி.தெற்கு(சுன்னாகம்) பிரதேசசபைத்தவிசாளர் க.தர்ஷன் கலந்துகொண்டார்.

நிகழ்வில் விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றதுடன், சிறார்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. விருந்தினர்கள், பங்குத்தந்தையர்கள், பங்கு மக்கள், ஊரவர்கள், கழக உறுப்பினர்கள் எனப்பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 1 =

*