;
Athirady Tamil News

கிரிந்திவெல: கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இராணுவ அதிகாரி கொலை..!!

0

கிரிந்திவெல, முதுன்பிடகந்த பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இருவருக்கு இடையில் இடம்பெற்ற வாய்தர்க்கத்தின் காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முதுன்பிடகந்த, ரதவான பகுதியை சேர்ந்த இராணுவ அதிகாரி ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலையைச் செய்த சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதுடன் சந்தேகநபரை கைது செய்ய கிரிந்திவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × three =

*