;
Athirady Tamil News

இணுவில் இந்துக்கல்லூரி முத்தமிழ் விழா..!! (படங்கள்)

0

இணுவில் இந்துக்கல்லூரி முத்தமிழ்விழா – வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டார்

இணுவில் இந்துக்கல்லூரியின் முத்தமிழ்விழா இன்று 28.05.2018 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் அதிபர் தி.தேவதயாளன் தலைமையில் கல்லூரியின் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராகவடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டதுடன் வலிகாமக்கல்விவலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் சு.தேவமனோகரன் மற்றும் பாடசாலையின் பழையமாணவரான ஐ.பரமேஸ்வரன் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாகக்கலந்து கொண்டனர்.

நிகழ்வில் மாணவர்களின் கலைநிகழ்வுகள் இடம்பெற்றதுடன், சாதனை படைத்த மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. நிகழ்வில் விருந்தினர்களுடன் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், எனப்பலரும் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 3 =

*