;
Athirady Tamil News

காஷ்மீரில் வங்கியை கொள்ளையடித்ததுடன் காவலரின் துப்பாக்கியை பறித்துச் சென்ற பயங்கரவாதிகள்..!!

0

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீகுஃப்வாரா பகுதியில் அம்மாநில அரசுக்கு சொந்தமான ஜம்மு-காஷ்மீர் வங்கியின் கிளை இயங்கி வருகிறது.

இன்று இந்த வங்கிக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த பயங்கரவாதிகள், வாசலில் காவலுக்கு நின்றிருந்தவரை தாக்கி, அவர் வைத்திருந்த துப்பாக்கியை பறித்தனர். காசாளரை துப்பாக்கி முனையில் மிரட்டி சுமார் ஒரு லட்சத்து 72 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து, தப்பிச் சென்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 + 19 =

*