;
Athirady Tamil News

அரசு மன நல மருத்துவமனைகளின் கோர முகம்: 446 நோயாளிகளிடம் வரம்பு மீறிய மருத்துவமனை ஊழியர்கள்..!!

0

பிரித்தானிய அரசு மன நல மருத்துவமனைகளில் 2013க்கும் 2017க்கும் இடையில் 446 நோயாளிகளிடம் மருத்துவமனை ஊழியர்கள் வரம்பு மீறிய சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நான்கு வருடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு மன நல மருத்துவமனை ஊழியர்கள் நோயாளிகளிடம் பாலியல் ரீதியாக முறை தவறி நடந்து கொண்டதற்காக தண்டிக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி அரசு மருத்துவமனைகளின் கோர முகத்தை வெளிப்படுத்தியுள்ளது.

தகவலறியும் உரிமைச் சட்டத்தின் பேரில் தனியார் தொலைக்காட்சி ஒன்று பிரித்தானியாவிலுள்ள 57 அரசு மன நல மருத்துவமனைகளில் மருத்துவமனை ஊழியர்கள் நோயாளிகளிடம் பாலியல் ரீதியாக முறை தவறி நடந்து கொண்ட சம்பவங்கள் எத்தனை பதிவாகியுள்ளன என்று கேட்டுக்கொண்டதன்பேரில் இந்த தகவல்கள் பெறப்பட்டுள்ளன.

113 சம்பவங்களில் 32 ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் சிலர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் அல்லது வேலையை ராஜினாமா செய்துள்ளார்கள்

சில சம்பவங்கள் பொலிசாருக்கும் தெரியப்படுத்தப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அவைகளில் முக்கியமான ஒரு சம்பவமாக மன நலப் பிரச்சினைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெஸ் என்னும் ஒரு பெண்ணின் சாட்சியம் தொலைக்காட்சியில் வெளியானது.

அவரிடம் அன்பாகப் பழகிய ஒரு ஆண் ஊழியர் பின்னர் அவரைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்ட விதம் குறித்து அவர் தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்திருந்தார்.

அதைக் காதல் என்று தவறாகக் கருதிய அந்தப் பெண் பின்னர் தாமதமாகத்தான் அந்த ஊழியரின் நோக்கத்தைப் புரிந்து கொண்டிருக்கிறார்

தனது தாயிடம் அவர் இந்த விடயத்தைத் தெரிவிக்க அவர் மருத்துவமனை நிர்வாகத்திடம் அந்த ஊழியரைக் குறித்து புகார் செய்ததால் அந்த ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த தகவல்கள் வெளியானது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை ஏற்படுத்தியுள்ளது.

Labour Campaign for Mental Healthஇன் தலைவராக இருக்கும் லேபர் MPயான Luciana Berger, இந்த தகவல்கள் தன்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருப்பதாகத் தெரிவிக்கிறார்.

நம்முடைய மன நல மருத்துவமனைகளில் ஒரு பாலியல் மீறலே அதிகம் என எண்ணுபவள் நான், அப்படியிருக்கும்போது இத்தனை சம்பவங்கள் நடந்துள்ளதாக அந்த தொலைக்காட்சி வெளிக்கொணர்ந்துள்ள செய்தி என்னை அதிர்ச்சியடையச் செய்துள்ளது

உடனடியாக நம்முடைய அனைத்து மருத்துவமனைகளிலும் ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று அவர் கூறியுள்ளார்.

அதேபோல் Mental health charity Mindஇல் Director of External Relations என்னும் பொறுப்பு வகிக்கும் Sophie Corlett, மன நல மருத்துவமனைகளில் பாலியல் மீறல்கள் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது, ஏற்கனவே மன நலப் பிரச்சினைகள் கொண்ட நோயாளிகள், அதிலும் சிலர் கடந்த காலத்தில் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதால் மன நலம் பாதிகப்பட்டவர்கள், குணமடைவதற்காக வந்த இடத்தில் இப்படி நடத்தப்பட்டது மிகவும் கவலைக்குரிய விடயமாகும் என்று தெரிவித்துள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × four =

*