;
Athirady Tamil News

சிமெண்ட் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை: 107 பேர் வேலையிழக்கும் அபாயம்..!!

0

உலகின் மாபெரும் சிமெண்ட் தயாரிப்பு நிறுவனமான LafargeHolcim, சூரிச் மற்றும் பாரீஸிலுள்ள தனது தலைமையகங்களை மூடுவதாக அறிவித்துள்ளதையடுத்து சுவிட்சர்லாந்தில் மட்டும் 107 பேர் வரை வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பிரான்ஸ் – சுவிஸ் கூட்டு நிறுவனமான LafargeHolcim செலவுகளை குறைக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக அறிவித்துள்ளது.

இதனால் சுவிட்சர்லாந்தில் 107 பேரும் பாரீஸில் 97 பேரும் வேலையிழப்பார்கள். சுவிட்சர்லாந்தில் மீதமிருக்கும் வேலைகள் நிறுவனத்தின் Holderbank தளத்திற்கு மாற்றப்படுவதோடு Zugஇல் ஒரு புதிய கார்ப்பரேட் அலுவலகம் திறக்கப்படும்.

அதேபோல் பாரீஸில் பணிகள் Clamartக்கு மாற்றப்பட உள்ளன. இந்த மாற்றங்கள் அனைத்தும் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேற்றப்பட உள்ளன.

2022ஐ இலக்காகக் கொண்டு திட்டமிடப்படும் இந்த மாற்றங்கள் 2019இன் முதல் காலாண்டில் 400 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகளை மிச்சப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படுகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக நிறுவனம் சரியாக செயல்படாததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வருவாய் குறைந்த அதே நேரத்தில், சிரியாவில் ஒரு சிமெண்ட் தொழிற்சாலையை இயக்குவதற்காக, ஆயுதம் தாங்கிய குழுக்களுக்கு லஞ்சம் கொடுத்த ஊழலில் சிக்கியதும் நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − 2 =

*