நியுமோனியாவால் பாதிக்கப்பட்ட ஐவர் திடீர் உயிரிழப்பு..!!

நியுமோனியா காய்ச்சலால் பீடிக்கப்பட்டு, மாத்தறை பொது வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த ஐவர் கடந்த ஒருசில தினங்களுக்குள் திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதத்தின் கடந்த 28 தினங்களில் இந்த காய்சச்சலால் பாதிக்கப்பட்ட 12 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 வயது கோசல செவ்வந்தி மற்றும் 76 வயது ஹேவகே கருணாதாச ஆகியோரே நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதோடு, மாத்தறை வைத்தியசாலையில் நிகழ்ந்த நான்கு மரணங்களில் மூன்று நியுமோனியா காய்ச்சலால் ஏற்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கிறிசாந்த சந்திமல் (43), டி.டபிள்யு.ஜெமிஹாமி (80) மற்றும் ஜே.டபிள்யு.குணசேகர (79) ஆகியோர் இந்த காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காய்ச்சலால் பீடிக்கப்பட்டு பலர் சிகிச்சைப்பெற்று வருகின்ற நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தென் மாகாணத்தில் பரவி வரும், நியுமோனியா காய்ச்சலைத் தொடர்ந்து மாகாணத்தின் பாடசாலைகளின் தரம் 1-5 வரையிலான ஆரம்ப பாடசாலைகளை மூடுவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனடிப்படையில், காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களின் 7 கல்வி வலயங்களுக்குற்பட்ட ஆரம்ப பாடசாலைகளை எதிர்வரும் 30ஆம் திகதிவரையில் மூடுவதற்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.