;
Athirady Tamil News

உத்தரபிரதேசத்தில் கடுகு எண்ணையால் பரவும் புது நோய்க்கு 4 பேர் பலி..!!

0

‘டிராப்சி’ எனப்படும் நீர்க்கோவை என்ற மர்ம நோய் உத்தரபிரதேச மாநிலத்தில் பரவி வருகிறது. இது கலப்படம் செய்யப்பட்ட கடுகு எண்ணையை பயன்படுத்துவோருக்கு அதிகம் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்த நோய் பாதித்தவர்களின் கால்களில் வீக்கம் ஏற்படும். இந்த நோய் இறுதியாக கடந்த 2005-ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் கடுமையாக பரவியது. அதில் 75 பேர் உயிரிழந்தனர்.

தற்போது 13 வருடத்திற்கு பிறகு அங்கு மீண்டும் இந்த நோய் பரவுகிறது. இதற்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ளனர். ஜனுப்பூர் பகுதியில் அசோக் குமார் (65) என்பவர் குடும்பத்துடன் தங்கியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 25-ந்தேதி அவரது மனைவிக்கு திடீரென கால்களில் வீக்கம் ஏற்பட்டது. பின்னர் வாந்தி, வயிற்றுப் போக்கும் உண்டானது. இதையடுத்து அவர் மரணம் அடைந்தார். அதே நோய் பாதிப்பால் மே 3-ந்தேதி அவரது மருமகளும், அதன் பின்னர் அடுத்தடுத்து 2 மகன்களும் பலியாகினர்.

தற்போது அசோக்குமாரும் அவரது 4 வயது பேத்தி சுவாதியும் இதே நோய் பாதித்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நோய் வேகமாக பரவி வருவதால் உத்தரபிரதேச மக்கள் பீதி அடைந்துள்ளனர். அதை தடுக்கும் நடவடிக்கையில் அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − twelve =

*