;
Athirady Tamil News

மாங்காய் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுமிக்கு குரங்கினால் ஏற்பட்ட கதி.!!

0

யாழ். சாவகச்சேரி கெருடாவில் பகுதியில் குரங்குக் கடிக்கு இலக்கான ஐந்து வயதுச் சிறுமியொருவர் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த சிறுமி முகத்தில் கடியுண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி சிறுமி மாம்பழம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, அதனைப் பறித்த போது குரங்கு முகத்தில் கடித்துள்ளது.

இந்நிலையில், குறித்த சிறுமி உடனடியாகச் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுப் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியாசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.அதேபகுதியைச் சேர்ந்த வி.தஸ்மிதா என்ற சிறுமியே இவ்வாறு குரங்குக் கடிக்கு இலக்கானவராவார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × five =

*