;
Athirady Tamil News

யாழில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்: நாளை ஆர்ப்பாட்டம்..!!

0

காலைக்கதிர் பத்திரிகையின் செய்தியாளர் யாழ்ப்பாணத்தில் நேற்று (திங்கட்கிழமை) அதிகாலை தாக்கப்பட்டமையைக் கண்டித்தும் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும் என வலியுறுத்தியும் யாழ்ப்பாண நகரில் நாளை ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.

யாழ்ப்பாண ஊடகவியலாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆர்ப்பாட்டம் நாளை முறபகல் 10 மணிக்கு யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக இடம்பெறவுள்ளது.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்று ஆதரவளிக்குமாறு அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள் உள்பட அனைத்து தரப்புகளுக்கும் ஏறபாட்டாளர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.

மேலும், பிரதேச செய்தியாளரும் , பத்திரிக்கை விநியோகஸ்தருமான செல்வராசா இராஜேந்திரன் மீதான தாக்குதலை வன்மையாக கண்டனம் வெளியிட்டுள்ளது.

அதுமட்டுமன்றி கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போன ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கவும் குற்றவாளிகளை சட்டத்தின் முன்னிறுத்த வேண்டும் எனவும் யாழ்.ஊடக அமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 + fifteen =

*