;
Athirady Tamil News

மின்மாற்றியில் கோளாறு: இருவர் படுகாயம்..!!

0

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் மின்மாற்றியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வீடுகளில் உள்ள மின்சார பொருட்கள் சேதமடைந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இருயதபுரம் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 04ஆம் குறுக்குத் தெருவில் உள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த நிலையேற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக வீடுகளில் இருந்த இலத்திரனியல் உபகரணங்கள் சேதமடைந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக குறித்த பகுதியில் பதற்ற நிலையேற்பட்டதுடன் குறித்த பகுதிக்கு வந்த மின்சாரசபை ஊழியர்கள் மற்றும் பொறியியலாளர்கள் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டனர்.

இச்சம்பவத்தால் இருதயபுரம் 04,05,06ஆம் குறுக்கு வீதிகளிலும், இருதயபுரம் பிரதான வீதிகளில் உள்ள வீடுகள் வர்த்தக நிலையங்களிலும் இதன் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் குறித்த மின்மாற்றி மிகவும் தாழ்வான நிலையில் பொருத்தப்பட்டிருப்பதால் பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளதால் அதனை மாற்றிப் பொருத்துவதற்கான நடவடிக்கைகளை மின்சார சபை எடுக்கவேண்டுமென அப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven − one =

*