;
Athirady Tamil News

அரச நிறுவனங்களில் மொழி உதவியாளர்கள் 3300 பேர் சேர்ப்பு..!!!

0

நாட்டிலுள்ள அரச நிறுவனங்களில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பணியாற்றக்கூடிய மொழி உதவியாளர்கள் 3300 பேர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “இதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக விண்ணப்பிக்கும் தமிழ் மொழி விண்ணப்பதாரர்கள் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் தமிழ் மொழிக்கு மேலதிகமாக சிங்களமொழியில் சித்தியடைந்திருக்க வேண்டும். அதேபோல் சிங்கள விண்ணப்பதாரர்கள் சிங்கள மொழிக்கு மேலதிகமாக தமிழ் மொழியில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

இந்த பதவிக்காக இணைத்துக்கொள்ளப்படுபவர்கள் பயிற்சி வழங்கப்பட்டு அனைத்து அரச அலுவலகங்களிலும் இணைத்துக்கொள்ளப்படுவார்கள்” என கூறினார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten + 11 =

*