;
Athirady Tamil News

அகதி அந்தஸ்து பெற பணம் வாங்கிய விவகாரம்: மத்திய குற்றவியல் பொலிஸ் ஆதரவு..!!

0

ஜேர்மனியின் ப்ரெமன் மாகாணத்தில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் அகதிகள் தொடர்பான அலுவலகம் ஒன்று கடந்த 2013 முதல் 2016 ஆம் ஆண்டு காலகட்டம் வரை சுமார் ஆயிரம் எண்ணிக்கையிலான தவறான நபர்களுக்கு அகதிகள் அந்தஸ்து வழங்கியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பான விசாரணையில் அந்த அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் பலர் பணம் பெற்றுக் கொண்டு, தவறான பலருக்கும் அனுமதி வழங்கியுள்ளனர்.

2017 ஆம் ஆண்டின் முதல் 6 மாதத்தில் மட்டும் ஈராக்கில் இருந்து புகலிடம் கோரிய 96.4 விழுக்காடு மக்களுக்கு அகதிகள் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் ஜேர்மனியின் மத்திய குற்றவியல் பொலிஸின் ஆதரவு இருந்ததாக ப்ரெமன் குடிவரவு அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை மத்திய குற்றவியல் மறுத்துள்ளது.

தொடர்ந்து இந்த விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணைக்கு முடிவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உள்விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one + 10 =

*