;
Athirady Tamil News

சுவிற்சர்லாந்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்திகரம்: ஆய்வில் தகவல்..!!

0

2018 ஆம் ஆண்டில் சுவிஸ் நாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்திகரமாக இருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகஅரசியலில் ஏற்பட்டுள்ள அதிருப்தியான சூழலிலும் சுவிஸ் நாடு எதிர்காலத்திற்க்கு ஏற்றவாறு தனது பாதுகாப்பை பலப்படுத்தியிருக்கிறது.

இந்த ஆய்வை ETH ஜூரிச்சில் மிலிட்டரி அகாடமி மற்றும் பாதுகாப்பு ஆய்வு மையம் நடத்தி இருக்கிறது. மேற்கண்ட ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

1999 வரை இது போன்ற வருடாந்திர ஆய்வின் முடிவுகள் பெரும்பாலும் வெளியுறவு கொள்கை, நாட்டின் பாதுகாப்பு மற்றும் தற்பாதுகாப்பு குறித்த பிரச்னைகள் பற்றிய மக்களின் கருத்து கணிப்பை வெளியிட்டு வந்திருக்கின்றது.

ஆனால் தற்போதைய 2018ஆம் ஆண்டு கணிப்பில் பயங்கரவாதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக இதன் ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

கணிசமாக பதிலளித்தவர்களில் பொது இடங்களில் பாதுகாப்பு சிறப்பாக இருக்கிறது என்று கூறியுள்ளனர், சுவிஸ் மக்களில் 95 சதவிகிதம் பேர் தாங்கள் பாதுகாப்பாக உணர்வதாக கூறியுள்ளனர்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குற்றம் குறித்த பயம் குறைந்துள்ளதாக தெரியவருகிறது.

சுவிட்ஸர்லாந்தின் எதிர்காலம் பற்றி கூறும்போது மிகுந்த நம்பிக்கையளிக்கும் வகையில் இருப்பதாக 85 சதவிகித மக்கள் கூறியுள்ளனர். கடந்த ஆண்டு இது 80 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

எது முக்கியம் சொந்த சுதந்திரமா அல்லது பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளா என்கிற கேள்விக்கு 64 சதவிகித மக்கள் பதிலேதும் சொல்லாமல் பின் வாங்கியுள்ளனர்.

இருப்பினும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்காக தங்கள் சுதந்திரங்களை விட்டு தர அவர்கள் தயாராக இருப்பதாகும் கூறியுள்ளனர்.

மக்கள் சுவிஸ்ஸின் பாதுகாப்பது சேவைகள் அமைப்பை நம்புகின்றனர். அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு விதிகள் தங்களுக்கு நன்மையே விளைவிக்கும் என்று இவர்களில் 64 சதவிகிதம் பேர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × five =

*