;
Athirady Tamil News

டிரினிடாட் டொபாகோ தீவுக்கு இந்தியர்கள் சென்ற நாள் – மே 30.1845..!!

0

மேற்கிந்திய தீவுகளில் உள்ள டிரினிடாட் டொபாகோ தீவுக்கு இந்தியர்கள் 1845-ம் ஆண்டு மே மாதம் 30ந்தேதி வந்திறங்கினர்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1431 – நூறாண்டுகள் போர்: பிரெஞ்சு வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் ரோவென் என்ற இடத்தில் ஆங்கிலேயர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நீதிமன்றத்தினால் உயிருடன் தீ வைக்கப்பட்டு மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டாள். * 1539 – தங்கம் கண்டுபிடிக்கும் நோக்கில் ஹெர்னாண்டோ டி சோட்டோ 600 படையினருடன் புளோரிடாவை அடைந்தான். * 1588 – 30,000 பேர்களுடன் ஸ்பானிய ஆர்மாடா என்ற 130 ஸ்பானியப் போர்க்கப்பல்களின் கடைசிக் கப்பல் ஆங்கிலக் கால்வாயை நோக்கிய பயணத்தை லிஸ்பனில் இருந்து புறப்பட்டட்து. * 1635 – முப்பதாண்டுப் போர்: பிராக் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. * 1815 – இலங்கையிலிருந்து காயப்பட்ட போர்வீரர்களை ஏற்றி வந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆர்னிஸ்டன் என்ற கப்பல் தென்னாபிரிக்காவுக்கு அருகில் மூழ்கியதில் அதில் பயணம் செய்த 378 பேரில் 372 பேர் கொல்லப்பட்டனர்.

* 1845 – டிரினிடாட் டொபாகோவுக்கு முதல் தொகுதி இந்தியர்கள் வந்திறங்கினர். * 1883 – நியூயோர்க் நகரில் புரூக்ளின் பாலம் இடிந்து விழப்போவதாக எழுந்த வதந்தியை அடுத்து இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 12 பேர் இறந்தனர். * 1913 – முதலாம் பால்க்கன் போர்: லண்டன் உடன்பாடு, 1913 எட்டப்பட்டு போர் முடிவுக்கு வந்தது. அல்பேனியா தனி நாடாகியது. * 1942 – இரண்டாம் உலகப் போர்: 1000 பிரித்தானிய போர் விமானங்கள் ஜெர்மனியின் கொலோன் நகரில் 90-நிமிடங்கள் குண்டுமாரி பொழிந்தன. * 1966 – முன்னாள் காங்கோ பிரதமர் எவரீஸ்டே கிம்பா மற்றும் பல அரசியல் தலைவர்கள் பகிரங்கமாகத் தூக்கிலிடப்பட்டார்கள்.

* 1971 – செவ்வாய்க் கோளின் 70 விழுக்காட்டைப் படம் பிடிப்பதற்காகவும் அதன் வளிமண்டலத்தை ஆராயவும் என மரைனர் 9 விண்ணுக்கு ஏவப்பட்டது. * 1972 – இஸ்ரேலின் விமானநிலையத்தில் ஜப்பானிய செம்படையினர் தாக்குதல் மேற்கொண்டதில் 24 பேர் கொல்லப்பட்டனர். * 1981 – வங்காள தேசத்தில் இடம்பெற்ற ராணுவப் புரட்சியின் போது அதிபர் சியாவுர் ரகுமான் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். * 1987 – கோவா தனி மாநிலமாகியது. * 1998 – வடக்கு ஆப்கானிஸ்தானில் 6.6 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 5,000 பேர் வரை கொல்லப்பட்டனர். * 2003 – எயார் பிரான்சின் கொன்கோர்ட் விமானம் தனது கடைசிப் பயணத்தை ஆரம்பித்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × two =

*