;
Athirady Tamil News

உ.பி.யில் லிப்ட் ஒன்று 11வது தளத்தில் இருந்து தரையில் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம்..!!

0

உத்தரப்பிரதேச மாநிலம் குருகிராம் பகுதியில் ஒரு பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்தின் அடுக்குமாடி குடியிருப்புகள் அமைந்துள்ளது. அதில் ரெஜென்சி பார்க் 2 என்ற அடுக்குமாடி குடியிருப்பில் இன்று ஒரு லிப்ட் விபத்து ஏற்பட்டது.

அந்த லிப்ட் 11-வது தளத்தில் இருந்து தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் உயர்தளத்தில் வசிக்கும் பெண், அவரது வீட்டு உதவியாளர் மற்றும் அவரது டிரைவர் ஆகிய மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த பெண்ணுக்கு முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. முதல்கட்ட விசாரணையில், லிப்ட் மோசமான நிலையில் இருந்ததே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 1 =

*