;
Athirady Tamil News

வல்லப்பட்டையுடன் வெளிநாட்டவர் இருவர் கைது..!!

0

பொரலஸ்கமுவ, மாலதி புளத்சிங்கள மாவத்தை பகுதியில் வல்லப்பட்டையை வைத்திருந்த வெளிநாட்டவர் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து 1 கிலோ கிராம் 698 கிராம் வல்லப்பட்டை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

42 வயதுடைய இந்திய பிரஜைகள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை பொலிஸார் கங்கொடவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொரலஸ்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × five =

*