;
Athirady Tamil News

கூட்டமைப்பு கைவிட்டதால் மக்கள் தென்னிலங்கை கட்சிகளுக்கு வாக்களித்தனர்!! வன்னி எம்.பி தெரிவிப்பு..!!

0

தாங்கள் நம்பியிருந்த கூட்டமைப்பு போன்ற கட்சிகள் கைவிட்டதால் மக்கள் தென்னிலங்கைக் கட்சிகளுக்கு இம்முறை கணிசமாக வாக்களித்தனர்: கே.கே.மஸ்தான் எம்.பி

இதுவரை காலமும் தாங்கள் நம்பியிருந்த கூட்டமைப்பு போன்ற கட்சிகள் கைவிட்டதால் மக்கள் தென்னிலங்கைக் கட்சிகளுக்கு இம்முறை கணிசமாக வாக்களித்தனர் என வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் தெரிவித்தார்.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் தென்னிலங்கையின் பிரதான இரு தேசிய கட்சிகளும் வன்னியில் கணிசமான ஆசனங்களை பெற்றுள்ளன. இந்த மாற்றத்திற்கு என்ன காரணம் என கருதுகிறீர்கள்..? என மக்கள் சந்திப்பு ஒன்றின் போது ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

தென்னிலங்கையின் பிரதான இரு தேசிய கட்சிகளும் இணைந்து மத்தியில் ஆட்சி அமைத்துள்ளதால் தமக்கான அபிவிருத்திக்காக மக்கள் அந்தக் கட்சிகளுக்கு வாக்களித்துள்ளார்கள். அத்துடன் இதுவரை காலமும் தாங்கள் நம்பியிருந்த கூட்டமைப்பு போன்ற கட்சிகள் கைவிட்டதாலும், அவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஒற்றுமையில்லா தன்மையும் மக்கள் மத்தியில் இந்த மாற்றம் ஏற்பட வழிவகுத்துள்ளது.

குறிப்பாக வன்னியில் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு பொறுப்பாக நான் இருப்பதால் இன, மத ரீதியான முரண்பாடுகள் இல்லாது நாம் வேலைகளை செய்தோம். சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு எந்தவொரு ஆசனமும் இல்லாத நிலையில் நாம் இந்த தேர்தலில் எதிர்கொண்டு தற்போது 31 ஆசனங்களை பெற்றுள்ளோம். இந்த நிலைக்கு எமது கட்சி தலைவர் கௌரவ ஜனாதிபதி மற்றும் என்மீது மக்கள் கொண்ட நம்பிக்கையே காரணம். ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரையிலும் அவர்களும் அபிவிருத்தி செய்வார்கள் என்ற நம்பிக்கையில் தான் மக்கள் வாக்களித்துள்ளார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 1 =

*