;
Athirady Tamil News

யாழில் ஊடகவியலாளர் தாக்கப்பட்டமையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..!! (படங்கள்)

0

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் காலைக்கதிர் பத்திரிகையின் பிரதேச செய்தியாளர் தாக்கப்பட்டமையை கண்டித்து, இன்று (புதன்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ். ஊடகவியலாளர்களின் ஏற்பாட்டில் யாழ். மத்திய பேருந்து நிலையம் வரை பேரணியாக சென்று, அங்கு இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, ‘அறிவாயுதம் ஏந்தும் பத்திரிகை மீது அழிவாயுதம் ஏந்துவாதா?’, ‘வாள்வெட்டு கலாசாரத்தை ஒழி ஊடக சுதந்திரத்தை மதி’, ‘எழுதுகோளின் நியாயத்திற்கு வாள்வெட்டுதான் பதிலா?’, ‘பொலிஸாரின் தாமதம் வன்முறையாளரின் ஊக்கம்’, ‘எழுத்தாயுதம் ஏந்தியவர்களின் இரத்தம் பார்க்கும் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வை’ போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை தாங்கியிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ஸ்.சிறிதரன், வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராசா, வடக்கு மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

காலைக்கதிர் பத்திரிகையின் பிரதேச செய்தியாளரும் விநியோகஸ்தருமான செ.இராஜேந்திரன் மீது, நேற்று முன்தினம் அதிகாலை 10 பேர் கொண்ட இனந்தெரியாத கும்பலொன்று வாள்வெட்டு தாக்குதல் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − eleven =

*