;
Athirady Tamil News

வவுனியாவில் 20 வருடமாக இயங்கிவரும் பிரதான மூன்று சங்கங்களுக்கு நிரந்தரக்காணி இல்லை..!!

0

வவுனியாவில் கடந்த 20வருடங்களாக இயங்கிவரும் முச்சக்கர உரிமையாளர்கள் சங்கம், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வர்த்தகர் சங்கம் ஆகிய மூன்நு சங்கங்களுக்கும் இன்று வரையில் ஒரு நிரந்தரக்காணி அற்ற நிலையிலிலும் நிரந்தர கட்டடம் அற்ற நிலையிலும் இயங்கி வருகின்றன. இவ்வாறு கட்நத ஞாயிற்றுக்கிழமை 27அன்று வவுனியா கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற முச்சக்கரவண்டிகள் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய வவுனியா தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திரு. இராஜேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கும்போது,

வவுனியாவில் 20வருட காலமாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்,முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம்,வர்த்தக சங்கம் என வவுனியாவின் பிரதான சங்கங்கள் இயங்கி வருகின்றன கடந்த 20 வருடகாலமாக இந்த மூன்று சங்கத்தினரும் மக்கள் பிரதிநிதிகளிடம் இந்த சங்கங்கள் நிரந்தரமாக ஓர் இடத்தில் அமைத்து இயங்குவதற்கு ஓர் நிலப்பரப்பினை கேட்டு வருகின்ற போதிலும் இதுவரையிலும் எந்தவிதமான நடவடிக்கையினையும் மக்கள் பிரதிநிதிகள் தமக்கு செய்து தரவில்லை என்றும் தொடர்ந்து 20வருடகாலமாக தம்மை ஏமாற்றி வருவதாகவும் குறிப்பிட்ட அவர் தொடர்ந்து கூறுகையில்

வவுனியாவிலோ அல்லது வடக்கு, கிழக்கிலோ ஏதும் தேவை ஏற்படும் பட்சத்தில் மக்கள் பிரதிநிதிகள் தம்மிடம் உதவி கேட்டு நிற்பார்கள் காரணம் கடையடைப்பிற்கு அல்லது ஹர்த்தால் அனுஷ்டிப்புக்கு,கண்ட பேரணிகளுக்கு,இன்னும் பல நிகழ்வுகளுக்கு மாத்திரம் தமது சுய அரசியல் இலாபத்திற்காக எம்மை பயன்படுத்தும் இந்த மக்கள் பிரதிநிகள் எமக்கு ஒரு துண்டு காணிக்காக ஏமாற்றி வருகிறார்கள் எமது பொதுக்கூட்டங்களிற்கு சமூகம் தரும் வேளையில் மாத்திரம் வெறுமனே வாய்பேச்சிற்காக அல்லது எம்மை சந்தோசப்படுத்துவதற்காக கூட்டங்களில் உங்களுடைய சங்கத்திற்கான காணி சம்பந்தமாக தாம் நடவடிக்கை எடுப்பதாக கூறி செல்வார்கள் இவ்வாறு 20வருடம் ஏமாற்றுப்பட்டுக் கொண்டு வருகிறோம் என மக்கள் பிரதிநிதிகளை கடுமையாக சாடியிருந்தார்

குறித்த நிகழ்வில் பல மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 4 =

*