உத்தமபாளையம் அருகே மருமகனை கத்தியால் குத்திய மாமனார்..!!

உத்தமபாளையம் அருகே சின்ன ஓவுலாபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜ் (வயது 31). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகள் சோபனா என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
சில நாட்களிலேயே கருத்துவேறுபாடு காரணமாக இருவருக்குமிடையே பிரச்சனை ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் சமரசம் செய்து வைத்த போதும் பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருந்தது. இதனால் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவத்தன்று பிரச்சனை முற்றவே ஷோபனா கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு வந்து விட்டார்.
மகள் கோபத்துடன் திரும்பி வந்ததால் முருகேசன் ஆத்திரத்தில் இருந்தார். சாலையில் நடந்து சென்ற பாண்டியராஜை வழி மறித்து தகராறில் ஈடுபட்டார். மேலும் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மருமகன் என்றும் பாராமல் குத்தினார். இதில் காயமடைந்த பாண்டியராஜன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.