;
Athirady Tamil News

பாகிஸ்தானில் சீக்கிய தலைவர் சுட்டுக்கொலை..!!

0

பாகிஸ்தானில் பெஷா வரை சேர்ந்தவர் கார்ன் ஜித்சிங் (52). இவர் அங்கு கடைவைத்து நடத்தி வந்தார். சீக்கியர் அமைப்பின் தலைவராகவும் இருந்தார்.

இவர் தனது கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் அவரை சரமாரியாக சுட்டான். குண்டு பாய்ந்த அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதற்கிடையே அவரை துப்பாக்கியால் சுட்ட நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். இந்த தகவலை போலீஸ் சூப்பிரண்டு சதார் சவுகாத்கான் தெரிவித்தார்.

இக்கொலைக்கான காரணம் தெரியவில்லை. பாகிஸ்தானில் சீக்கியர்கள் மைனாரிட்டியாக உள்ளனர். சமீபகாலமாக இவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகிறார்கள். இதனால் அங்கு வாழும் சீக்கியர்கள் பீதி அடைந்துள்ளனர்.

பெரும்பாலானவர்கள் பெஷாவரில் தங்கியுள்ளனர். இதற்கு முன்பு பல்வேறு பகுதிகளில் இருந்தனர். கொல்லப்பட்ட கார்ன்ஜித் சிங் இதற்கு முன்பு குள்ரம் ஏஜென்சி பகுதியில் தங்கியிருந்தார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 5 =

*